ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தனது அதிகாரத்திற்கு அமைய நாடாளுமன்றத்தை கலைப்பார் என உயர் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றம் கலைக்க தடையல்ல
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்னர் இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாத பட்சத்தில், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தடையல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியம்.
ஆனால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
Discussion about this post