பிரித்தானியாவில் (UK) விநியோக துறையில் (Delivery Service) முன்னணி வகிக்கும் நிறுவனமான எவ்ரியில் (Evri) 9000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட்(Apollo Global Management) என்ற நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த 9,000 புதிய பணியாளர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
நிகழ்நிலை விநியோக சேவைகள் உயர்வடைவதன் காரணமாக நிறுவனத்தின் பணியாளர்களை அதிகரித்து சேவைகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமான தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, அஞ்சலர்கள்(couriers), கிடங்கு ஊழியர்கள்(warehouse staff) மற்றும் பிற துணைப் பணியாளர்கள் என அனைத்து நிலைகளிலும் இந்த புதிய பணியாளர் தேர்வு பிரித்தானியா முழுவதும் நடைபெறவுள்ளது.
ஊதியம்
இதேவேளை, ஸ்காட்லாந்து, சஃபோக்கில்(Suffolk) உள்ள பரி செயிண்ட் எட்மண்ட்ஸ்(Bury St Edmunds), டெவானில்(Devon) உள்ள பிளைமவுத்(Plymouth) மற்றும் கேட்விக் விமான நிலையம்(Gatwick Airport) ஆகிய இடங்கள் பிரதாக பணியிடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, சுமார் 8,000 அஞ்சலர்கள் மற்றும் 1,000 கிடங்கு மற்றும் துணைப் பணியாளர்கள் என மொத்தம் 9,000 பேரை பணியமர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அஞ்சலர்களுக்கு மணிக்கு சராசரியாக £16.50 ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post