சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapaksa) மற்றும் செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன(Lasanta Alagiyawanna) மற்றும் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை செப்டெம்பர் 24-ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா பிரதிவாதி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) உள்ளிட்டோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
Discussion about this post