ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எமது தரப்பு வேட்பாளர் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிப்போம். அதுவரை காத்திருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு ஆதரவா..??தொடர்ந்தும் தெரிவிக்கையில், மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தான் தேர்தலில் களமிறங்கப் போவதாக காலியில் வைத்து அறிவித்துள்ளார். அது நல்லது. அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துக்கள் இல்லை.
எங்களது தரப்பில் இருந்து இருந்து களமிறக்கப்படும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு உண்டு. எமது கட்சியினரின் கருத்துக்களை நாங்கள் செவிமடுக்கின்றோம்.கட்சியினரின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்தே வேட்பாளர் தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.ஒருவேளை ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியினரின் முடிவு அமைந்தால் அதனையும் பரிசீலிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post