Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடா அரசின் திட்டத்துக்கு மாறாக புலம்பெயர்தல் அதிகரிக்கும் என்று கூறும் கனடா வங்கி

July 27, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடா அரசின் திட்டத்துக்கு மாறாக புலம்பெயர்தல் அதிகரிக்கும் என்று கூறும் கனடா வங்கி
0
SHARES
Share on FacebookShare on Twitter

புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு.ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளது கனடா வங்கி.மார்ச் மாதம் 21ஆம் திகதி, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் (non-permanent residents or NPRs) எண்ணிக்கையை, மக்கள்தொகையில் 6.2 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (Immigration, Refugees and Citizenship Canada or IRCC) அறிவித்திருந்தது.

ஆனால், அரசின் கருத்துக்கு மாறாக, வித்தியாசமான கருத்தொன்றை தெரிவித்துள்ளது கனடா வங்கி.உண்மையில், கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது கனடா வங்கி.அது, 2025, 26ஆம் ஆண்டு காலகட்டத்தில், வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி வீதம், மொத்தத்திலேயே 2 சதவிகிதம் மட்டுமே குறையும் என்று கூறியுள்ளது.மார்ச் மாதம் கனடா அரசு அறிவித்ததற்கு மாறாக, ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவிகிதமாக இருந்ததாக கூறும் கனடா வங்கி, அந்த வீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.ஆகவே, அரசு அறிவித்த 5 சதவிகிதத்தை எட்ட கூடுதல் காலம் பிடிக்கும் என்றும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.இந்த, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்கள் அல்லது non-permanent residents என்பது, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் அகதிகளைக் குறிக்கும்.

Previous Post

கனடாவில் இலங்கை மாணவிக்கு நேர்ந்த துயரம்

Next Post

ஒலிம்பிக் போட்டிக்கு Google நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய புதிய Doodle

Next Post
ஒலிம்பிக் போட்டிக்கு Google நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய புதிய Doodle

ஒலிம்பிக் போட்டிக்கு Google நிறுவனம் இன்று அறிமுகப்படுத்திய புதிய Doodle

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.