2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தமது X தளத்தில் #CrushCorruption எனும் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை முன்னேற்றுவதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Discussion about this post