யுனிசெப் (UNICEF) நிறுவனமானது ஜப்பான் (Jappan) அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சகத்தில் இன்று (22) நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவிடம் (Dr. Ramesh Pathirana) அந்த ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளன.இலங்கை முழுவதிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் முறைமையை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இந்த வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளிரூட்டப்பட்ட அறைகள்ஜப்பான் அரசாங்கம் 2021ஆம் ஆண்டிலிருந்து தடுப்பூசிகளை பாதுகாப்பான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்துவதற்காக பெரிய நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகள், எடுத்துச் செல்லத்தக்க தடுப்பூசி கொள்கலன்கள் மற்றும் வெப்பநிலைக் கண்காணிப்பு மானிகள் போன்ற குளிர்ச் சங்கிலி உபகரணங்களை வழங்கி வந்துள்ளது.
அதன் தொடர்சியாகவே இந்த குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Discussion about this post