தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியலமைப்பில் சட்டரீதியாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 06 இல் இருந்து 05 வருடங்களாக குறைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena)தெரிவித்துள்ளார்
பொலன்னறுவையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியதாவது:மகிந்தவின் வரம்பற்ற அதிகாரம்அரசியலமைப்பின் 19வது திருத்தம் பற்றி எனக்கு மட்டுமே சரியாக தெரியும். மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) 18வது அரசியலமைப்பின் மூலம் வரம்பற்ற அதிகாரங்களை பெற்றிருந்த போது, அந்த அதிகாரங்களை நான் குறைத்தேன்.
இந்த நேரத்தில் 19வது அரசியலமைப்பு பற்றி மட்டும் பேசக்கூடாது. 18 ஆவது அரசியலமைப்பின் மூலம் ஒற்றையாட்சி அதிகாரத்துடன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரம் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற ஜயம்பதி விக்கிரமரத்னஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 06லிருந்து 05 வருடங்களாக சட்டரீதியாகக் குறைத்தார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த சட்டமூலம் மாற்றப்பட்டது. உலகில் எந்தத் தலைவரும் செய்யாத வகையில் எனது அதிகாரத்தை விட்டுக்கொடுத்தேன் என மேலும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post