மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட விமானங்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையை (Sri Lanka Airforce) மேற்கோள் காட்டி பெறப்பட்ட அறிக்கைக்கு அமைய இந்த விடயம் பெறப்பட்டுள்ளது.அந்தவகையில், தனது 11 வருட பதவிக் காலப்பகுதியில் 978 உள்நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2014ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக அதிகளவான விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை விமானப்படைஇது தொடர்பான தகவல்களை முதலில் இலங்கை விமானப்படை வழங்க மறுத்துள்ள நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, விமானப்படைக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய ஆணையம் தொடர்புடைய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அதே வருடம் 08 விமானங்களுக்கு விமானப்படையின் உலங்கு வானுர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு அதிகூடிய எண்ணிக்கையான 148 விமானங்களும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் 10 விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion about this post