வடமாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்றேஸின் நியமனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவரது நியமனம் தொடர்பான ஆவணங்கள் அரச சேவை ஆனைக்குழுவின் கல்விச் சேவை குழுவிடம் இல்லை என கல்விச் சேவை ஆணைக்குழு எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது.முன்னாள் வடமாகாண கல்வி பணிப்பாளரும் தற்போது இலங்கை கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளராக கடமை ஆற்றுகின்ற ஜோன்குயின்ரஸுக்கு நியமனம் வழங்கப்பட்ட போது இணைப்பு அடிப்படையிலேயே இவர் ஆசிரியர் கலாசாலையில் இருந்தார்.
நிர்வாக சேவை இந்தநிலையில், அவருக்கு நிர்வாக சேவை நியமனம் வழங்கப்பட்ட போது பதவி உயர்வு கோர முடியாது என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் குறித்த நியமன கடிதம் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால் கல்விச் சேவை ஆணைக்குழுவிடம் இருந்து எடுக்கப்பட்டதாக தகவல் கசிந்த நிலையில் குறித்த குழுவுக்கு தகவல் அறியும் சட்ட மூலம் வழங்கப்பட்டது.
மேலும், SLEAS நியமனம் அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவினால் மாத்திரமே வழங்கப்படுகின்ற நிலையில் இவ்வாறான பதில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post