மைக்ரோசாஃப்ட்(Microsoft) மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் இன்று முடங்கியது.இதன் காரணமாக பல்வேறு வழிகளில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பாதிப்படைந்துள்ளன.
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கம்இந்நிலையில், நாம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம் என்னும் ரீதியில் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
மேலும் சிலர், இது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடக்கமானது, புடினுடைய வேலையாக இருக்கலாம் என்றும் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்
மூன்றாம் உலகப்போர் ஒரு சைபர் போராகத்தான் இருக்கும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த அச்சம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.இதேவேளை, மைக்ரோசாஃப்ட் பாதிப்பை கேலி செய்யும் விதத்தில் எலான் மஸ்க் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post