சிங்கள மக்களின் முக்கிய ஆதாரமான மகாவம்ச சரித்திரம் அடங்கிய புத்தகங்களின் தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பானது நேற்று (17) யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலேவினால் (Audrey Azoulay) வெளியிடப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகசேகரிப்பில் காணப்படும் மகாவம்ச சரித்திரம் அடங்கிய புத்தகங்களின் தொகுப்பே யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக பிரகடனப்படுத்தபட்டுள்ளது.
உலக பாரம்பரிய சின்னம்
மகாவம்ச சரித்திரம் அடங்கிய புத்தகங்களின் தொகுப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்ததற்கான சான்றிதழ் ஒட்ரே அசுலேவினால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் ஒட்ரே அசுலே கலந்து கொண்டுள்ளார்.
இந்தநிலையில், பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் ஒட்ரே அசுலேவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் துணைவேந்தர் எம்.டி.லாமாவன்சவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post