கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி ,நாளை (19) பிற்பகல் 1 மணிவரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் (Mannar) ஊடாகப் புத்தளம் (Puttalam) கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து (Hambantota) பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும்
இதன்போது, கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்பிட்டியிலிருந்து கொழும்பு (Colombo), காலி (Galle), ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரை கடல் அலையின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு உயரும் அலைகள் நிலத்தை நோக்கி வரக்கூடிய நிலை ஏதும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post