Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ஓமான் கடலில் கப்பல் மூழ்கியதில் காணாமல் போன 9 பேர் மீட்பு

July 18, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
ஓமான் கடலில் கப்பல் மூழ்கியதில் காணாமல் போன 9 பேர் மீட்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஓமான் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல்  மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS டெக் யுத்த கப்பல் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட 9 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் எஞ்சிய 8 பேரும் இந்திய பிரஜைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோரை மீட்பதற்காக இந்திய கடற்படையின் P 81 ரக விமானமும் பயன்படுத்தப்பட்டிருந்தது. 

ஓமான் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று மூழ்கி விபத்திற்குள்ளானதில் இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயிருந்தனர். 

கொமொரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த குறித்த கப்பல், யேமன் துறைமுகமான ஏடனிலிருந்து ஓமானின் முக்கிய தொழில்துறை துறைமுகமான டுக்மில் பகுதியில் வைத்து கவிழ்ந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன. 

ஓமான் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்பு கொண்டு காணாமல் போன 3 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்

Previous Post

ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகளின் பாதுகாப்பிற்காக நாளாந்தம் 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை – அரச அச்சகம்

Next Post

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் மீதான ஆய்வுகள் ஆரம்பம்

Next Post
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் மீதான ஆய்வுகள் ஆரம்பம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் மீதான ஆய்வுகள் ஆரம்பம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.