ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சிடும் பணிகளின் பாதுகாப்பிற்காக நாளாந்தம் 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பம் முதல் பொலிஸ் பாதுகாப்பு தேவைப்படுவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக பொலிஸாருக்கு தௌிவுபடுத்தியுள்ளதுடன், தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post