அம்பலாங்கொட (Ambalangoda) பிரதேசத்திற்குட்பட்ட கந்த மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.41 வயதுடைய நபரொருவரே வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் தலையில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி வந்தார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைஇதன் போது, 2002ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தம்மிக்க நிரோஷன் என்ற முன்னாள் வீரரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் பிரபல பாடசாலை ஒன்றின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியையும் வழிநடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post