பிரித்தானியா வாழ் தமிழரான போதனா சிவானந்தன் அங்கிருந்து(UK) சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் இளவயது வீரர் என்ற சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ளார்.
ஹங்கேரியில்(Hungary) நடைபெறும் 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரின் பிரித்தானிய குழுவில் போதனா இணைக்கப்பட்டுள்ளதன் மூலமே இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11-22 வரை ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் 2024 செஸ் ஒலிம்பியாட் (Chess Olympiad )போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வீரர்களில் போதனா சிவானந்தன் ஒருவராவார்.
ஈழத்தமிழர்
போதனா சிவானந்தன் சதுரங்க உலகையே வியப்பில் ஆழ்த்தியதுடன், தனது சாதனை நிகழ்ச்சிகளால் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஈழத்தமிழர் என்ற அடையாளத்துடன் பித்தானியாவில் பிறந்து வளர்ந்த போதனாவின் செஸ் விளையாடும் நுட்பத்திறனை பிரித்தானிய அரசாங்கம் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.
“இங்கிலாந்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு பெரிய மரியாதை மற்றும் நான் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என போதனா சிவானந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post