ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 இலட்சம் ரூபா பணத்துடன் இருவரை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் 1 கிலோ 14 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 10 இலட்சம் ரூபாவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
85 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு இருவர் முயற்சி செய்வதாக கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை
இதனை தொடர்ந்து, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த போதைப்பொருள் விற்பனையில் வெளிநாட்டில் மறைந்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பின்னணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிராண்ட்பாஸ் மிஹிஜய செவன அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஜிந்துபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
Discussion about this post