பூஸா உயர் பாதுகாப்பு (High Security Prison Boossa) சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த விசேட சோதனை நடவடிக்கையானது நேற்று (7) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில், காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் பூஸா சிறைச்சாலையின் வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறி்த்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைஇதன்போது சீமெந்து மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Discussion about this post