பெண்களின் இலட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது என பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கீர் ஸ்டார்மர் நாட்டின் 58 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.இந்நிலையில், பிரிட்டனில் முதல் பெண் நிதி அமைச்சராக 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சராக பதவியேற்ற ரேச்சல் ரீவ்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவதுமுதல் பெண் நிதியமைச்சர்”நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது எனது வாழ்வின் பெருமையாகும். இது என்ன பொறுப்பைக் கொண்டுவருகிறது என்பதை நான் அறிவேன்.
மேலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உழைக்கும் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு நமது பொருளாதாரத்திற்குத் தேவையான மாற்றத்தை வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாதுஅமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாற்றுப் பொறுப்புடன் வருகிறது. இதைப் படிக்கும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் பெண்களுக்கும், உங்கள் இலட்சியங்களுக்கு வரம்புகள் இருக்கக்கூடாது என்பதை இன்று காட்டட்டும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post