இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று(07) மாலை திருகோணமலையில் அக்கினியில் சங்கமமானது. காலஞ்சென்ற இரா.சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை தபால் நிலைய வீதியிலுள்ள உள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் அரசியல் பிரமுகவர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அன்னாரது பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிக் கிரியைகளின் பின்னர் அன்னாரின் பூதவுடல் அக்கினியில் சங்கமமாகியது…
Discussion about this post