ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில், விபச்சார விடுதியை நடத்தி வந்த நான்கு முகாமையாளர்கள் உட்பட விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை ஆகிய இடங்களில் வசிக்கும் 19 மற்றும் 35 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, திம்புலாகல தலுகான, ஹபரணை, களனி, மொனராகலை, பூனானி, அனுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் வசிக்கும் 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய பெண்களே விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்
மேலும், சந்தேகநபர்களான முகாமையாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி அந்த பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Discussion about this post