பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தடை ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப் (whatsup) பேஸ்புக் (facebook) டிக்டொக் (tiktok) இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் (x)போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை குழு பரிந்துரை
முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரைபஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் (Maryam Nawaz) சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.
வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் (Punjab) அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post