ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த சமிந்த தயான் லேனவ என்பவர், தம்மிடமோ அல்லது சட்டத்தரணிகளிடமோ ஆலோசனை பெறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post