முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள், 03 காப்புறுதிப் பத்திரங்களை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தடைசெய்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, 03 மகள்மார் மற்றும் மருமகனின் ஆயுள் காப்புறுதிகளும் தனிப்பட்ட வங்கிகளிலுள்ள கணக்குகளும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.
மேல்நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னர் தடையுத்தரவு நீடிப்பும் அடுத்த கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்படுமென இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Discussion about this post