கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள் உயிரிழப்பதற்கு முன்னர், எடுத்த செல்ஃபி புகைப்படம் தற்போது பேசுபொருளாகி வருகின்றது.
தங்காலை(Tangalle) மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6 ஆம் திகதி 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற டெவோன் 5(Devon 5) மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்ததால் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடைசி புகைப்படம்
அதன் பிறகு அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடற்றொழிலாளர்களான நயன காந்த( 42) , பதும் டில்ஷான்(24 ) , சுஜித் சஞ்சீவ(32 ), பிரதீப் நிஷாந்த(33) மற்றும் 68 வயதான அஜித் குமார ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்துவதற்கு முன், மது போத்தலுடன் கடற்றொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
இதேவேளை, உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் சடலங்கள் நேற்று (03) காலை தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
நீதவானின் விசாரணையின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன. அத்துடன், மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்களில் ஒருவர் கடந்த 1ஆம் திகதி நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post