மேற்கு ஆபிரிக்க நாடான Sierra Leone-இல் குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பலரும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். முதல் பெண்மணி Fatima Bio-இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்டமூலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி Julius Maada Bio கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்யும் ஒருவருக்கு 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post