ஒழுக்கம் இல்லாமல் நாட்டின் கல்வியை முன்னெடுத்துச்செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக ஆசிரியர் பணியில் இணையும் அனைவரும் தமது சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலை கல்வியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் இது தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் மற்றும் டிப்ளோமா தாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(03) அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 60 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் 1,706 பட்டதாரிகளுக்கும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
Discussion about this post