இரத்தினபுரி (Ratnapura) மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய இலட்சக்கணக்கான ரூபாவை செலுத்தாத உள்ளூர் அதிகாரிகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி மாநகர சபைக்கு வீதி விளக்குகளுக்காக மாதாந்தம் 38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணமாகப் பெறப்படுவதாக மாநகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான மின்சாரக் கட்டணத்துடன் அறிவிப்பும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அறிவிப்பு இந்த நிலையில், மின்சாரக்கட்டணம் தொடர்பான பிரச்சினைக்கு அம்பிலிபிட்டிய மாநகர சபைகள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ளதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.
இதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் இந்தப் பணத்தை செலுத்த முடியாத நிலையில் வீதி விளக்குகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு விதுளிய மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
Discussion about this post