வடக்கு மாகாணத்தில்(northern province) வசிக்கும்/தொழில் காரணமாக தங்கியிருக்கும் இந்தியப்(india) பிரஜைகளுக்கான தூதரக விடயங்களுக்கான “ஓப்பின் ஹவுஸ்” (Open House) கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடவுச்சீட்டு, தூதரக விவகாரங்கள்யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இந்திய பிரஜைகள் எதிர்நோக்கும் ஏதேனும் கடவுச்சீட்டு, தூதரக விவகாரங்கள் அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இல. 14, மருதடி லேன், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் 10 மணி முதல் 11 மணி வரை “ஓப்பின் ஹவுஸ்” கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள இந்திய குடிமக்கள் மேற்படி கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ளவும் அதேபோன்று, இந்த மாவட்டங்களில் வசிக்கும் இந்திய பிரஜைகளின் விசா, OCI & தூதரக சேவைகள் போன்ற PCC, சான்றொப்பம் போன்றவை தொடர்பான குறைகள்/வேண்டுகைகள் போன்றவை இந்த கூட்டங்களின் போது பூர்த்தி செய்யப்படும்
உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்த, தயவுசெய்து முன்கூட்டியே எம்மை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண். 021-2220504/5 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும். அல்லது cons.jaffna@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் – என்றுள்ளது..
Discussion about this post