நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள இலங்கையர்கள் தயாராக வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.அத்தோடு, இவை உலகின் மிக முக்கியமான துறைகள் இருப்பினும் இலங்கையர்கள் இதில் மற்ற நாடுகளை விட 15 வருடங்கள் பின்தங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சு குறித்த விடயத்தை நேற்று (02) அலரிமாளிகையில் இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் கழகங்களை ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இருபத்தியோராம் நூற்றாண்டின் அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பொருந்தும் அத்தோடு இது நமது நாடு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயப் பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post