நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டம் நோட்டன் பகுதியில் 13 வயதுடைய சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், பாடசாலை சிறுமி ஒருவர் கடந்த 30 திகதி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து நோட்டன் காவல்துறையினர் 42 வயதுடைய அவரது மாமாவை கைது செய்துள்ளனர்.இதையடுத்து, கைது செய்து செய்யப்பட்ட குறித்த நபர் ஹட்டன் (Hatton) நீதிமன்றத்தில் நேற்று (02) முன்னிலைப்டுத்தப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர்இதனடிப்படையில், கைதான சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக நோட்டன் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post