இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.சிறிலங்காவின் அதிபராக கடந்த 2015 ஆம் ஆண்டு பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தான் இந்த விடயத்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் தான் வேட்பாளராக களமிறங்காவிட்டாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வுஇதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பான தனது அரசியல் நடவடிக்கைகளில் தான் தொடர்ந்து ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளிலும் இதே முறைமை பின்பற்றப்படுவதாகவும் அதிபர் பதவியில் இருந்து விலகிய எவரும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தனது மகன் தம்ம சிறிசேன எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவார் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
Discussion about this post