நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(2) கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புக் கொடிப் போராட்டம்
இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (01) பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post