முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர தெரிவித்துள்ளார்.எனினும் நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது என்பதை ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று புரிந்து கொள்வார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளாக வழக்குஅந்த நேரத்தில் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. நான் நான்கு முறை வேலையை மாற்ற வேண்டியிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அது எனக்கு ஓரளவு நிவாரணமாக இருந்திருக்கும்.இச்சம்பவத்தினால் தனது மகன் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எது எப்படி இருந்தாலும், தவறு செய்வதற்கு முன், நாட்டில் சட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூட்ட, இந்த தீர்ப்பு ஒரு சிறந்த உதாரணம்
மூன்று வருட சிறைத்தண்டனைஇந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஹிருணிகாவுக்கு (Hirunika Premachandra) வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தனக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post