புதிய இணைப்பு உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் (R.Sampanthan) உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலாம் இணைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) சற்று முன்னர் காலமாகியுள்ளார்.உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.இதன்படி, தனது 91 ஆவது வயதில் இரா.சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகவீனம்இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
அதன்போது, இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதாகவும் விடுமுறை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post