மறு அறிவித்தல் வரை அரபிக் கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கும் கடல்சார் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Discussion about this post