கொழும்பு துறைமுகத்தின் (Colombo Port) மேற்குமுனை அபிவிருத்தி மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையின் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோபல்ட் கனிமங்களை (Cobalt minerals) அகழ்வதற்கான நடவடிக்கையில் தாய்வானை (Taiwan) சேர்ந்த உமிகோர் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் (Adani Group) செயற்படவுள்ளது என இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கனிமங்கள் பல தொழில்துறைகளுக்கும் இராணுவ பயன்பாட்டிற்கும் மிகவும் அவசியமானவை, இது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படுக்கை உரிமை
இரு நாடுகளிற்கும் இடையிலான கடற்படுக்கை உரிமை பிரச்சினைக்கு தீர்வை கண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பதிந்துள்ள பெறுமதிமிக்க கனியங்களை கண்டறிவதற்காக இந்தியாவுடன் கூட்டு சேர்வதன் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவதற்கு இலங்கை எண்ணியுள்ளது.
ஐக்கியநாடுகளின் (UN) கடல்சட்ட ஒப்பந்தத்தின் படி இலங்கை தனது கண்ட அடுக்கினை 200 கடல்மைல்களில் இருந்து நீடித்துள்ளது. 2009 இல் சர்வதேச கடற்படுக்கை ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தினை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது.
தற்போது இலங்கைக்கு கடற்கரையிலிருந்து 200 மைல்களிற்கு விசேட உரிமை காணப்படுகின்றது. இலங்கை இதன் காரணமாக மத்திய இந்திய சமுத்திரத்தில் கோபல்ட்டுகள் நிறைந்த பெரோமங்கனீஸ்; மேலோடுகளை பொருளாதார நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம்.
எனினும் சர்வதேச கப்பல் பாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இதனை முன்னெடுக்கவேண்டும். இந்தியாவும் தனது எல்லையிலிருந்து 350 கடல்மைலிற்கு உள்ள தனது கண்ட அடுக்கிற்கு உரிமையை கோரியுள்ளது. இந்தியா அதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்ததும் அகழ்வில் ஈடுபடுவதற்காக காத்திருக்கின்றது.
GRS61FD
கோபல்ட் கனிமங்கள்
இந்த சர்ச்சையை தீர்ப்பதற்கு இரு நாடுகளிற்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை காத்திருக்க விரும்பாத இந்தியா கோபால்ட் நிறைந்த பகுதிகளை ஆராய்வதற்காக சர்வதேச கடற்படுக்கை அதிகார சபையிடம் 2024 ஜனவரி முதலாம் திகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
எனினும் அபானசி நிக்கிட்டின் கடல்மலைப்பகுதி இலங்கையின்அதிகார வரம்பிற்கு உட்பட்டது என தெரிவித்து சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை இந்தியாவின் இந்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இது குறித்து சர்வதேச அமைப்பு இந்திய அதிகாரிகளிற்கு அறிவித்துள்ளது.
கடற்பரப்பில் சீன கப்பல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்படாத இந்து சமுத்திர கடற்படுக்கையை ஆராய்வதற்கான உரிமையை இந்தியா கோருகின்றது.இலங்கையின் அதிகாரத்தின் கீழ் வரும் கோபால்ட் அதிகம் காணப்படும் அபனசி நிகிடின் கடல்மலையை ஆராய்வதற்கும் இந்தியா விரும்புகின்றது. இந்த கடல்மலையில் பில்லியன் டொலர்கள் பெறுமதியான கோபால்ட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post