நேட்டோ (NATO) அமைப்பின் 75ஆவது மாநாடு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கட்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாநாடனது அடுத்த மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரை அமெரிக்காவின்(USA) வோஷிங்டன்(Washington) நகரில் நடபெறவுள்ளது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்( Joe Biden) கலந்து கொள்ளவுள்ளதோடு, இஸ்ரேலைத்(Israel) தொடர்ந்து பல அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பு விடுத்த அமெரிக்கா
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட 32 நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதால் ரஷ்யா அந்த நாடு மீது படையெடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post