மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் இன்று (30.6.2024) இரவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை திருத்தம்
இந்த மாதாந்த விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையில் கணிசமான அளவு குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், வழக்கமான பெட்ரோல் விலை லிட்டருக்கு 20-30 ரூபாயும், வழக்கமான ஒயிட் டீசல் விலை லிட்டருக்கு 15-20 ரூபாயும் குறைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் இம்முறை எரிபொருள் விலையில் பாரிய திருத்தம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post