இலங்கையில் (Sri Lanka) உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவன தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர (Timati Wickramasekhara) தெரிவிக்கையில், “குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்து வருவதுடன் உடல் பருமன் பற்றி நாம் மறந்துவிட்டோம்.
ஊட்டச்சத்து குறைபாடு
நாங்கள் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்துகிறோம் ஆனால் குழந்தை பருவ உடல் பருமன் அதிகரித்து வருகிறது.
ஏறக்குறைய 50% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனானவர்கள் இதனால் இலங்கைக்கு ஒரு புதிய ஆராய்ச்சி தரவு கட்டமைப்பு தேவை அத்தோடு இந்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ள போதிலும் அதிகப்படியான போசாக்கின்மை அதிகரித்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post