யாழ்ப்பாணம் (jaffna) – செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்சரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்ட வழக்கில் விற்பனை செய்த நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன
பொரித்த நிலையில் பல்லி
இதன்போது, ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்சரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்சரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையிலேயே, மிக்சரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது
Discussion about this post