தமது போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றும் நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது.
அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக்குறைவாக காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, இன்று ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி பொதுத்தராதர சாதரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டாளர்கள் மற்றும் மதிப்பீட்டு நிலைய ஊழியர்களுக்கு இது தொடர்பில் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்படவிருந்த மதிப்பீட்டு பணிகள் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக நாளை வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post