கிராம உத்தியோகத்தர்கள் இன்றும்(27) நாளையும்(28) கடமைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்கப்படாத போக்குவரத்து கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, தொடர்பாடல் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போது முன்னெடுக்கப்படும் சட்டப்படி வேலைநிறுத்த நடவடிக்கைக்கு மேலதிகமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
Discussion about this post