இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 150 மில்லியன் டொலரை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த தொகையை வழங்குவதற்கு அதன் நிர்வாகக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக உலக வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு “இலங்கை ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டு திட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகள், மத்திய மருந்தகங்கள், பல் மருத்துவ கிளினிக் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள் போன்றன இதில் உள்ளடங்கும்.
குறித்த நிறுவனங்களில் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதனூடாக நாடு முழுவதும் காணப்படுகின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப மருத்துவ சேவை நிறுவனங்கள் பயனடையவுள்ளன.
Discussion about this post