கனடாவில் (Canada) வேலை அனுமதி பத்திரம் பெறுவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், வெளிநாட்டு பிரஜைகளின் பட்டப்படிப்பு தொடர்பான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள இனி அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளதுடன் கனேடிய அமெரிக்க எல்லை பகுதியில் இவ்வாறு அனுமதி வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வசிப்பவர்கள்
அத்தோடு, சில வெளிநாட்டு பிரஜைகள் மோசடியான முறையில் வேலை அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவில் தற்காலிகமாக தங்கி இருக்கும் நபர் ஒருவர் வேலை அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு குறுக்கு வழிகளை பயன்படுத்துவதனை தடுக்கும் நோக்கில் புதிய தடை நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள்
தற்காலிகமாக கனடாவில் வசிப்பவர்கள் மாணவர் அனுமதி கல்வி அனுமதி அல்லது பணி செய்வதற்கான அனுமதிக்காக இணையத்தில் விண்ணப்பம் செய்யும் போது ஏற்படக்கூடிய கால தாமதத்தை தவிர்க்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறி பின்னர் இவ்வாறு விண்ணப்பம் செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது குடிவரவு நடைமுறைகளை பிழையாக பயன்படுத்தும் ஓர் செயல்முறை என அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளதுடன் இந்த சிக்கலை தவிர்க்கும் நோக்கில் எல்லை பகுதியில் பணி செய்வதற்கான அனுமதி கூறி விண்ணப்பிப்பதனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post