வைரஸ் காரணமாகவோ, அணுசக்தி யுத்தத்தின் காரணமாகவோ உலகம் அழியாது என்றும், உண்மையான ஆபத்து தொடர்பில் விஞ்ஞானிகள் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.
உலகம் எப்படி அழியும் என்ற கேள்வி சாமானியர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவருக்கும் உள்ளது. எனவே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அணு ஆயுதப் போரால் பூமி அழிந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் கொரோனா போன்ற வைரஸ் தொற்றால் உலகம் அழிந்துவிடும் என்கிறனர்.
மனிதர்களின் அழிவு
ஆனால், அண்மைகாலங்களில் இன்னொரு கருத்து உலா வரத் தொடங்கியுள்ளது. மேற்கூறிய இரண்டு வழிகளும் இல்லை என்றும், பூஞ்சையால்தான் உலக அழிவு குறிப்பாக, மனிதர்களின் அழிவு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
பூஞ்சையால் ஏற்படும் அழிவு மனித இனத்தையே அழித்துவிடும் என்கிறார் நுண்ணியிரியலாளர் ஆர்டுரோ காஸடேவால். பூஞ்சை வைரஸ் கார்டிசெப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் ஜாம்பி (Zombie) போன்ற உயிரினங்களாக மாறுகிறார்கள். ஆர்டுரோ காஸடேவால், 67 வகையான பூஞ்சைகள் மனித குலத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.
பூஞ்சையால் ஏற்படும் அழிவுகள்
இவரது ஆய்வு குறித்து, அண்மையில் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. அதில், பூஞ்சையால் ஏற்படும் அழிவுகள் குறித்த முக்கிய விஷயங்களை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது ஒரு நபரை ஜாம்பியாக மாற்றக்கூடிய ஒரு பூஞ்சை பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், புதிய மற்றும் ஆபத்தான பூஞ்சை நோய்க்கிருமிகளை சரியான நேரத்தில் நாம் பார்ப்போம் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்தின் விளைவாக பூஞ்சைகள் மனித குலத்தின் மீது புதிய நோய்களைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்புள்ளது.
சில பூஞ்சைகல் முன்னோடியில்லாத வழிகளில் இன்னும் பல மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும், புதிய நோய்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்பதற்கான வளர்ந்து வரும் சான்றுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜாம்பி வகை பூஞ்சை
பனிக் கண்டத்தில் எரிபொருள் படிவத்திற்காக, ஆயிரக்கணக்கான அடி ஆழத்திற்கு துளையிட்டு வருவதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
இதனால், உறைந்த நிலையில், இருக்கும் பல ஆபத்தான வைரஸ்கள் வெளியில் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் ஜாம்பி வகை பூஞ்சைகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஜாம்பி வகை பூஞ்சையின் தோற்றம் பண்டைய போலியோ வகை நோய்களின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
Discussion about this post