மூவருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாளை (26) இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றி, விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.
புதிய அமைச்சர்கள் நியமனம்
அங்கு இந்த புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு வந்த போதிலும் தற்போது சுயேட்சை எம்.பி.க்களாக செயற்படும் பலம் வாய்ந்த மூவருக்கு இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அரசுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post