யாழில் வட இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாய் சித்திரவதை செய்வதாக தெரிவித்து யாழ். காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் (colombo) இருந்து யாழ்ப்பாணம் வந்து, காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிடுகையில்,
கடல் வழியாக இந்தியா
குறித்த சிறுவன் வட இந்தியாவை (india) சேர்ந்தவன் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும், இங்கு இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
தாயை எச்சரித்த காவல்துறையினர்
யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.
மேலும், சிறுவனின் தாயை காவல்துறையினர் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் சிறுவனை தண்டிப்பதாக தாயார் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த காவல்துறையினர், சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post