தேசிய மக்கள் சக்தி (NPP) அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்ற கூற்றுக்களை மறுத்துள்ள அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva), உண்மையான ஒப்பந்தம் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்சாக்கள் இடையே இருப்பதாக கூறினார்.
தேசிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்கவுடன்(ranil wickremesinghe) ஒப்பந்தம் செய்துள்ளதாக சிலர் வதந்திகளை பரப்பி வருவதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இடையேதான் ஒப்பந்தம்
ரணிலுடன் ஒப்பந்தம் போட்டு மூடிமறைக்க என்ன இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி வெல்லப் போகிறது என்பதால் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டுறவுத் தேர்தலை ஒத்திவைப்பதன் மூலமும் எங்கள் வெற்றியைத் தடுக்க முயல்கிறார்கள். ஆனால், உண்மையான ஒப்பந்தம் ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இடையேதான் உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள் கலந்துரையாடி வருவதாக சில்வா தெரிவித்துள்ளார்.
ரணிலுடன் இணையப்போகும் ஐக்கிய மக்கள் சக்தியினர்
“ரணிலுடன் தமது எதிர்கால அரசியல் பயணத்தை இரவிலேயே திட்டமிடுகிறார்கள், பகலில் தேசிய மக்கள் சக்தி ரணிலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஊடகங்கள் முன் கூறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த19 சக்திவாய்ந்த பிரமுகர்கள் ஏற்கனவே அதிபர் ரணிலிடமிருந்து பரவலாக்கப்பட்ட நிதியைப் பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post